பொது செய்தி

தமிழ்நாடு

சிரிப்போம்...சிரிச்சிக்கிட்டே இருப்போம்...

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
சிரிப்பு என்பது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் அற்புத மாமருந்து. உடலில் சுருண்டு கிடக்கும் நரம்புகளை தட்டி எழுப்பும் சூட்சுமம் தெரிந்த கலை. தேவையான சிரிப்பு, அடக்கமான சிரிப்பு, அவசியமான சிரிப்பு, ஆழமான சிரிப்பு, எதார்த்தமான சிரிப்பு, போலிச்சிரிப்பு, நையாண்டிசிரிப்பு என சிரிப்பின் பட்டியல் நீளமானது. தற்போது கொரோனா காலகட்டத்தில் சகஜ வாழ்க்கை பல்லிளித்து
 சிரிப்போம்...சிரிச்சிக்கிட்டே இருப்போம்...

சிரிப்பு என்பது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் அற்புத மாமருந்து. உடலில் சுருண்டு கிடக்கும் நரம்புகளை தட்டி எழுப்பும் சூட்சுமம் தெரிந்த கலை. தேவையான சிரிப்பு, அடக்கமான சிரிப்பு, அவசியமான சிரிப்பு, ஆழமான சிரிப்பு, எதார்த்தமான சிரிப்பு, போலிச்சிரிப்பு, நையாண்டி
சிரிப்பு என சிரிப்பின் பட்டியல் நீளமானது. தற்போது கொரோனா காலகட்டத்தில் சகஜ வாழ்க்கை பல்லிளித்து வருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் சிரிப்பின் மகிமை அவசியமான ஒன்று என்கின்றனர் சிந்தனையாளர்கள்.

சர்வதேச சிரிப்பு தினமான இன்று சிரிப்பின் சிறப்பு குறித்து பகிர்ந்து கொண்டதிலிருந்து...


கொரோனாவை வெல்லும் சிரிப்பு
குழந்தை தினமும் 400 முறை சிரிக்கும். பெரியவர்கள் 10 முறைக்கு கீழ் மனம் விட்டு சிரிக்கின்றனர். மனம் விட்டு சிரிக்கும் போது தசைகள் நன்கு இயங்கும். நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முகத்தில் இறுக்கம் குறையும். முகம் பொலிவு பெறும். சிரிப்பது மற்றவர்களையும் பரவசப்படுத்தும். மூளையில் 'என்டார்பின்' எனும் ஹார்மோன் நன்கு சுரக்கும். 'கோவிட் 19' வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்கவும் என்டார்பின் ஹார்மோன் உதவுகிறது.

டாக்டர். பிரகலாதன், கண்காணிப்பாளர்

அரசு மருத்துவமனை, விருதுநகர்

அவமானமல்ல அடையாளம்

இயந்திர வாழ்க்கையில் மனிதனோட ஆயுட்காலம் குறைந்து வருகிறது. வாழும் காலத்தை கவலையில்லாம், மாத்திரை மருந்துகளிலிருந்து நல்ல முறையில் வாழ நாம் சிரிச்சு வாழனும். சிரிப்பு மனிதனுக்கு அவமானமல்ல அடையாளம்.ஆயிரம் வகை நகை போட்டு மேனியை அலங்கரிக்கலாம். முகத்தில் புன்னகை இல்லையென்றால் அத்தனையும் வீண். நகைச்சுவை என்பது சாதாரணமானதல்ல. அது மகாத்மாவையே வாழ வச்சது. சிரித்து வாழ்வோம். சிறந்து வாழ்வோம்.

- அ. பேச்சியப்பன்,

நகைச்சுவை துணுக்கு எழுத்தாளர் ராஜபாளையம்யோகாவில் 'லாபிங் தெரபி'

யோகா கலையில் சிரிப்பு தனி முத்திரை பதிக்கிறது. ஆங்கிலத்தில் 'லாபிங் தெரபி' என்பர். இரு கைகளை முன் பக்கம் நீட்டி சிரித்து கொண்டே தட்டுவதால் கைகளில் நரம்புகள் துாண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீரடையும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற எதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து கூட்டாக அனைவரும் உரக்க சிரிப்பதால் முக இறுக்கம் குறையும். முகம் தேஜஸ் பெறும். நரம்புகள் துாண்டப்படும். கண் நரம்புகள் நன்கு இயங்கும். மனம் அமைதி பெறும்.

- சங்கரபாண்டியன்,

யோகா ஆசிரியர், விருதுநகர்மனம் விட்டு சிரிப்போம்

சிரிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சிரிப்பினால் ஒருவரின் ஆயுள் கூடும் என்பது உண்மையே. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். கவலைகள், மன அழுத்தங்கள் குறையும். குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்து சிரிக்க வேண்டும். இதே போல் நண்பர்களுடன் சேர்ந்து மனம் விட்டு சிரிக்க வேண்டும்.இதன் சிரிப்பு மற்றவர்களை மகிழ்விக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.

மல்லிகா,

குடும்பதலைவி சித்துராஜபுரம்நல்லதொரு மருத்துவம் நகைச்சுவை

புன்னகை மனிதனை மட்டுமல்ல உலகையே ஆளும் மாபெரும் சக்தி. நினைத்ததை சாதிக்கும் இலக்கை அடைய வைப்பது சிரிப்பு. பூட்டிக்கிடக்கும் வாழ்க்கையை திறக்கும் மந்திரசாவி சிரிப்பு மட்டும் தான். இன்று கொரோனா பீதியால் பய உணர்வு வந்துள்ளது. நகைச்சுவை என்பது நம் சொத்து. நல்லதொரு மருத்துவம். சிரிப்புடன் வாழ்வோம் கொரோனாவை வெல்வோம்.
புனிதா,

பட்டிமன்ற பேச்சாளர், அருப்புக்கோட்டை


மனநிறைவு தருது சிரிப்பு

மழலையின் சிரிப்பில் பெற்றவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஏற்படுவது மகிழ்ச்சி. அத்தகைய மழலை செல்வங்கள் பள்ளியில் தனித்திறன் வகுப்புகளில் சுதந்திரமாக
விளையாடுவது அவர்களுக்கு அளவில்லா மகிழ்வை தரும் என்பதை கற்று கொடுக்கும்போதே உணர்கிறோம். அதனால்தான் அவர்கள் தனித்திறன் வகுப்புகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வருகிறார்கள். அவர்களுக்கு யோகா, பரதம், கிளாசிகல் டான்ஸ் கற்றுகொடுக்கும்போது
அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி எங்களுக்கும் மனநிறைவை தருகிறது.

எஸ். பாரதி,

ஆசிரியை, ஸ்ரீவில்லிபுத்துார்மகிழ்ச்சியாக கடக்கிறோம்

கல்லுாரி தோழிகளை பார்த்தாலே மனதில் பரவசம் ஏற்பட்டு தானாகவே நகைச்சுவை உணர்வு வந்துவிடும். கிராமங்களில் பெரியவர்கள் பேசும் நகைச்சுவை உணர்வுகளை கல்லுாரியில் பேசி சிரிப்போம். வீட்டில் பல்வேறு பிரச்னைகளால் மன பாரத்துடன் இருந்தாலும்கூட
கல்லுாரிக்கு வந்தவுடன் எதையாவது சிரித்து பேச பாரங்கள் குறைந்து மன மகிழ்ச்சியை
ஏற்படுத்தும் . நகைச்சுவை உணர்வு இருப்பதால்தான் ஒவ்வொரு நாளையும்மகிழ்ச்சியாக கடக்கிறோம்.

அபிநயசுந்தரி, கல்லூரி மாணவி, காரியாபட்டி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X