கொரோனா தடுப்பில், கவனம் செலுத்துங்க சொன்னா கேளுங்க!அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அட்வைஸ்| Dinamalar

தமிழ்நாடு

கொரோனா தடுப்பில், கவனம் செலுத்துங்க 'சொன்னா கேளுங்க!'அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் 'அட்வைஸ்'

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
 கொரோனா தடுப்பில், கவனம் செலுத்துங்க 'சொன்னா கேளுங்க!'அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் 'அட்வைஸ்'

திருப்பூர்:''கொரோனா அபாயம் இருப்பதால், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என, கண்காணிப்பு அதிகாரி டாக்டர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பணிகளை ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி, வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் சுகாதாரத்துறையினருடன், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் விஜய கார்த்திகேயன் விளக்கினார்.கண்காணிப்பு அதிகாரி டாக்டர் கோபால் பேசியதாவது:மக்கள் தொகை அதிகம் உள்ள, மாநகராட்சி பகுதியில், நோய் தடுப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாலுகா அரசு மருத்துவமனைளும், 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.சில மாவட்டங்களில், 2 ஆயிரம் பேர் வரை தொற்று பரவ வாய்ப்புள்ளதாக, கொரோனா கண்காணிப்பு கமிட்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று திடீரென அதிகரித்தாலும், சமாளிக்கும் அளவுக்கு, வசதிகளை செய்துவைக்க வேண்டும்.
எதிர்ப்பு சக்திமேம்பாடுவீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள், பின்பற்ற வேண்டிய உணவு முறை, மருந்து ஆகிய விவரத்தை தெளிவாக வழங்கி, கண்காணிக்க வேண்டும். மாவட்ட மக்களுக்கு, எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.முககவசம் அணிவதை சுமையாக நினைக்க கூடாது; சிலர், சரியான முறையில் பயன்படுத்தாமல், கழுத்தில் மாட்டிக்கொள்கின்றனர்.
முககவசத்தை, மூக்கு மற்றும் வாய் முழுவதும் மூடும் வகையில் அணிய வேண்டும். உடல்நிலையில் மாற்றம் தெரிந்தால், உடனே, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
எஸ்.பி., திஷா மிட்டல், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி 'டீன்' வள்ளி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.விழிப்புணர்வில் அசட்டைதிருப்பூரில், பனியன் நிறுவனங்களை அடுத்து, கட்டுமான துறை வளர்ந்து வருகிறது. நகர பகுதியில் ஏராளமான கட்டடங்கள், நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர், தினக்கூலி அடிப்படையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றுகின்றனர். காலை நேரம் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து குறிப்பிட்ட இடங்களில் கூட்டமாக சேர்ந்து நிற்கும் தொழிலாளர்களை, கட்டட மேஸ்திரிகள், கான்ட்ராக்டர்கள் நேரில் சென்று வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அவ்வகையில், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் காலை,7:00 மணி முதல், கூட்டமாக குவிந்து விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். மற்றவர்கள் துளியும் அக்கறையின்றியும், சமூகஇடைவெளியும் இல்லாமல் நிற்கின்றனர்.பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடன், பல்வேறு இடங்கள் சென்ற பணியாற்றும் இவர்கள் நோய் தொற்று குறித்து உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பறக்கும் படையினர், இப்படி கூட்டமாக கூடும் தொழிலாளர்களையும் எச்சரிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X