பராமரிக்கலாமே : காட்சி பொருளான கால்நடை தண்ணீர் தொட்டிகள்; கண்டுக்காததால் அரசு நிதி ரூ. லட்சக்கணக்கில் வீண்| Dinamalar

தமிழ்நாடு

பராமரிக்கலாமே : காட்சி பொருளான கால்நடை தண்ணீர் தொட்டிகள்; கண்டுக்காததால் அரசு நிதி ரூ. லட்சக்கணக்கில் வீண்

Added : ஜூலை 01, 2020
Share
 பராமரிக்கலாமே :  காட்சி பொருளான கால்நடை தண்ணீர் தொட்டிகள்; கண்டுக்காததால்  அரசு நிதி ரூ. லட்சக்கணக்கில்  வீண்

அருப்புக்கோடடை:விருதுநகர் மாவட்டம் முழுவதும் காட்சி பொருளாக உள்ள கால்நடை தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் .

வறட்சி காலங்களில் கண்மாய்கள், ஊரணிகளில் தண்ணீர் இருப்பதில்லை. இந்நேரங்களில் தண்ணீருக்காக கால்நடைகள் அலைகின்றன. கண்மாய் பகுதியை யொட்டிய காடுகளிலிருந்து வரும் மான்களும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு கால்நடைகள் தண்ணீரை தேடி அலையாத வகையில் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

ஆனால் இதை முறையாக அமைக்காமல் கடமைக்கு தொட்டியை கட்டினர். கட்டியதோடு சரி . தண்ணீர் சேகரம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதோடு தொட்டிகளும் தரமாக கட்டப்படவில்லை. இதனால் பெரும்பாலான தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக தான் உள்ளன. ரூ.லட்சக்கணக்கில் செலவிட்ட அரசு நிதி வீணானது தான் மிச்சம். இனியாவது தொட்டிகளை புதுப்பித்து கால்நடைகள் தண்ணீர் அருந்துவதற்கு ஏற்ற வகையில் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொட்டிகள் அவசியமே



ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை தொட்டிகளை அரசு அமைத்திருப்பது நல்ல விஷயம் தான். இது தண்ணீர் தேடி ஓடும் கால்நடைகளுக்கு வசதியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான தொட்டிகள் தண்ணீரின்றி முட்புதர்கள் வளர்ந்து பயன்பாடின்றி கிடப்பதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

மோகன்வேல்,

தனியார் ஊழியர்,அருப்புக்கோட்டை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X