கொரோனாவால் சமூக ஆர்வலர் மனைவியுடன் பலி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (10)
Advertisement
அடையாறு, : கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, பார்வையற்றோர் சங்க தலைவரும், அவரது மனைவியும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது, மனவளர்ச்சி குன்றிய ஒரே மகனும், கவலைக்கிடமாக உள்ளார். சென்னை, அடையாறு மண்டலம், 173வது வார்டு, ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி., கார்டனைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 62; பார்வை குறைபாடு உடையவர்.இலவச பயிற்சி மையம்சமூக ஆர்வலரான இவர், அகில இந்திய பார்வையற்றோர்
கொரோனாவால் சமூக ஆர்வலர் மனைவியுடன் பலி

அடையாறு, : கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, பார்வையற்றோர் சங்க தலைவரும், அவரது மனைவியும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது, மனவளர்ச்சி குன்றிய ஒரே மகனும், கவலைக்கிடமாக உள்ளார்.

சென்னை, அடையாறு மண்டலம், 173வது வார்டு, ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி., கார்டனைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 62; பார்வை குறைபாடு உடையவர்.இலவச பயிற்சி மையம்சமூக ஆர்வலரான இவர், அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநில தலைவராக இருந்தார். மயிலாப்பூரில், பார்வையற்றோருக்கான, இலவச பயிற்சி மையம் நடத்தி வந்தார்.இவரது மனைவி கீதா, 58. கணவரது, சமூக சேவைக்கு உறுதுணையாக இருந்தவர். இவர்களது ஒரே மகன், மணிகண்டன், 33. மனவளர்ச்சி குன்றிய இவர், திருநெல்வேலியில் உள்ள, காப்பகம் ஒன்றில் தங்கி இருந்தார். ஊரடங்கால், இவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.மேலும், ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி சென்று உதவி செய்து வந்தார்.

இந்நிலையில், மணிகண்டனுக்கு காய்ச்சல் பாதித்து, 18ம் தேதி, ஓமந்துாரார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடன், கீதா இருந்தார். இந்நிலையில், அருணாச்சலம் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மூன்று பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மணிகண்டன், கீதா ஆகியோருக்கு தொற்று இருப்பதும்; அருணாச்சலத்திற்கு தொற்று இல்லை எனவும் முடிவு வந்துள்ளது. இருப்பினும், மூன்று பேரும், அங்குள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.தீவிர சிகிச்சை பிரிவுஎக்ஸ் - -ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில், அருணாச்சலத்தின் நுரையீரலில், அதிகமாக கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரியவந்தது.

அவருக்கு, மருத்துவர்கள் கொரோனாவுக்கான சிகிச்சை அளித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கீதா உயிரிழந்தார். நேற்று காலை, அருணாச்சலம் உயிரிழந்தார். மணிகண்டன், தீவிர சிகிச்சை பிரிவில், கவலைக்கிடமாக உள்ளார்.மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவிகரமாக இருந்த அருணாச்சலம், மனைவியுடன் உயிரிழந்த சம்பவம், மாற்றுத்திறனாளிகள் மத்தியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
03-ஜூலை-202022:03:40 IST Report Abuse
Ku Su தப்பிலிகானுகளுக்கு இப்போ திருப்தியா ?
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
03-ஜூலை-202012:12:05 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்களை தன் பக்கம் இழுத்து கொண்டார் இறைவன்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூலை-202008:15:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni எண்டாபடுபாவி சீனாக்காரனே இவ்ளோஅவளம்களை பார்த்துமிறக்கமே இல்லாமல் நோய்களைப்பரப்பினியே நீ நல்லாஇருப்பியா நாசமாபோவீங்க எல்லோரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X