பஸ் இயக்கம் நிறுத்தம்: முண்டியடித்த பயணிகள்| Dinamalar

பஸ் இயக்கம் நிறுத்தம்: முண்டியடித்த பயணிகள்

Added : ஜூலை 01, 2020
Share
 பஸ் இயக்கம் நிறுத்தம்: முண்டியடித்த பயணிகள்

திருப்பூர்:நேற்று மாலையுடன் பஸ் இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்துக்குள் இயங்கும் பஸ்களில், கூட்டம் சற்று அதிகரித்தது.ஜூன், 26 முதல் மண்டலங்களுக்கு இடையேயான போக்கு வரத்துக்கு தடை செய்யப்பட்டு, மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. ஊரடங்கு, இம்மாதம், 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 15ம் தேதி வரை பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.ஜூன், 30ம் தேதியான நேற்றுடன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால், நேற்று காலை முதலே மாவட்ட எல்லையான உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில் செல்லும் பஸ்களில் கூட்டம் சற்று அதிகரித்திருந்தது. அதே நேரம், நகருக்குள் இயங்கிய டவுன் பஸ்களில் கூட்டம் வழக்கம் போல் இருந்தது.நேற்று மாலை, 5:00 மணியுடன் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அரசின் அடுத்த அறிவிப்புக்கு பின்பே பஸ் இயக்கப்படும், என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X