பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள்: முடிவு தெரியும் வரை தனிமை அவசியம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:முடிவுகள் வரும் வரை கொரோனா பரிசோதனை மேற்கொண்டர்வர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்களா என்பதை சுகாதாரத்துறையின் உறுதிப்படுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தினமும், 600 க்கும் மேற்பட்டவர்கள், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சேகரம் செய்யப்படும் சளி மாதிரி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு நாள் கழித்த பின், முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது.அதுவரை, பரிசோதனை மேற்கொண்டவர்கள், தனது அன்றாட பணியை தொடர்கின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். எனவே, கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள், முடிவு தெரியும் வரை தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை, சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள் கூறுகையில், 'பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்படும் வரை, வெளியில் உலாவுவதால், பலருக்கும் நோய் பரவும் நிலை ஏற்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X