பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தவருக்கு சத்தான உணவு வழங்கல் 

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்;கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுகள் வழங்கப்படுகிறது.திருப்பூர், பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள், தொற்று சந்தேகத்தில் இருப்பவர்கள், அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வழங்கப்படுகிறது.காலையில் இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வழங்கப்படுகிறது. மேலும், இஞ்சி, ஏலக்காய் டீ, சப்பாத்தி, இட்லி, சம்பா கோதுமை உப்புமா, வேகவைத்த முட்டை, பால், சாம்பார் சாதம், புதினா சாதம், கீரை வகை, சுண்டல், பனங்கற்கண்டு சுக்கு பால், கபசுர குடிநீர் என பலதரப்பட்ட உணவு பட்டியல் நீள்கிறது.இதுநாள் வரை, மருத்துவமனை சமையலறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு, உணவு பாதுகாப்பு துறையால் உணவு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, அரசு மருத்துவ கல்லுாரியில், செயல்படுத்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X