பொது செய்தி

தமிழ்நாடு

25 சதவீத மானியத்துடன் தொழிற்கடன்: மாவட்ட தொழில் மையம் அழைப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:புதிய தொழில் துவங்க விரும்புவோர், தமிழக அரசின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 25 சதவீத மானியத்துடன் தொழிற்கடன் பெற்று பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞருக்கு, மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.உற்பத்தி தொழிலுக்கு, 10 லட்சம் முதலீடு, சேவை மற்றும் வியாபார தொழிலாக இருந்தால், ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டிலும் துவங்கலாம். 25 சதவீத மானியம் உண்டு.குடும்ப ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள, 35 வயது வரையுள்ளவரும், சிறப்பு பிரிவாக இருந்தால், 45 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர், www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பள்ளி மாற்றுச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று, விற்பனை நிலையத்தில் பெற்ற விலைப்பட்டியல் ஆகியவற்றை, 'ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்யலாம்.நடப்பு ஆண்டில், 215 நபர்களுக்கு, 1.35 கோடி ரூபாய் மானியத்துடன், தொழிற்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என, மாவட்ட தொழில் மையம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X