கபசுர குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூலை 01, 2020
Share

உத்தமபாளையம்:உத்தமபாளைம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.

சித்தா டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் டி.எஸ்.பி., சின்னகண்ணு முன்னிலை வகித்து துவக்கினார். இந்திராநகர், பைபாஸ் ரோடு, கல்லுாரிச் சாலை, மின்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 7 நாட்களுக்கு நகரின் அனைத்து பகுதிகளிலும் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X