பொது செய்தி

தமிழ்நாடு

சேவை அளிக்காத சேவை மைய கட்டடம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 சேவை அளிக்காத  சேவை மைய கட்டடம்

அவிநாசி:நடுவச்சேரி ஊராட்சியில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம் பயனற்று கிடப்பதால், அரசு பணம் வீணாகிறது.அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் செயல்படுகின்றனர். குழு செயல்பாட்டுக்காக, தளிஞ்சிபாளையம் பகுதியில், கடந்த, 2016 --17ல், 17 லட்சம் ரூபாய் செலவில், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது.கடந்த நான்காண்டுகளாக, இந்த கட்டடம் எவ்வித பயன்பாடுமின்றி, வெறுமனே பூட்டிக் கிடக்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் எவ்வித பயனுமின்றி இருப்பது வருத்தமளிக்கிறது. இதனை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.இதேபோல், ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளில் இ-சேவை மைய கட்டடங்கள் பயனற்று கிடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X