பொது செய்தி

தமிழ்நாடு

'மூக்குக்கு மேல் முக கவசம்' :கலெக்டர் அறிவுறுத்தல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பல்லடம்:'மூக்குக்கு மேல் முக கவசம் அணிய வேண்டும்,' என, பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.பல்லடம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் பங்கேற்று மக்கள் அளித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர்.அதன்பின், கடைவீதி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ரோட்டோரத்தில் வியாபாரம் மேற்கொண்டு வந்த மூதாட்டி ஒருவரிடம், 'முக கவசத்தை மூக்கின் மீது அணிய வேண்டும். சிலர் வாயை மட்டும் மூடும் வகையில் அணிகின்றனர்,' என அறிவுறுத்தினார். வியாபாரிகள், பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார். தாசில்தார் சிவசுப்பிரமணியம், நகராட்சி கமிஷனர் கணேசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X