350 கிராமங்களில் ஜமாபந்தி நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

350 கிராமங்களில் ஜமாபந்தி நிறைவு

Added : ஜூலை 01, 2020
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுகா, 350 வருவாய் கிராமங்கள் உள்ளன. நிதியாண்டில் நடக்கும் வருவாய் கணக்கு பரிவர்த்தனையை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க, ஜூன் மாதம் ஜமாபந்தி நடக்கும்.ஊரடங்கு அமலில் இருப்பதால், வரலாற்றில் முதன்முதலாக, பொதுமக்கள் இல்லாமல் ஜமாபந்தி முடிந்துள்ளது. பொதுமக்கள், பொதுசேவை மையங்களில், தங்கள் மனுக்களை
 350 கிராமங்களில்  ஜமாபந்தி நிறைவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுகா, 350 வருவாய் கிராமங்கள் உள்ளன. நிதியாண்டில் நடக்கும் வருவாய் கணக்கு பரிவர்த்தனையை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க, ஜூன் மாதம் ஜமாபந்தி நடக்கும்.ஊரடங்கு அமலில் இருப்பதால், வரலாற்றில் முதன்முதலாக, பொதுமக்கள் இல்லாமல் ஜமாபந்தி முடிந்துள்ளது. பொதுமக்கள், பொதுசேவை மையங்களில், தங்கள் மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருவாய் கிராம அளவிலான, 21 வகையான கணக்கு பதிவேடுகள் விவரத்தை சரிபார்த்து, தாசில்தார் மற்றும் ஜமாபந்தி அலுவலர்கள் ஒப்புதல் அளித்தனர். மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட, 350 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது.கொரோனா காரணமாக, இரண்டே நாட்களில் ஜமாபந்தி நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், பொதுமக்கள், 15ம் தேதி வரை, பொதுசேவை மையங்களில், தங்களது மனுக்களை பதிவு செய்யலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X