பொது செய்தி

தமிழ்நாடு

'முக கவசம் மட்டுமே, ஒரே ஆயுதம்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

'கொரோனாவுக்கு மருந்து, நீங்கள் அணியும், 'முக கவசமே' கொரோனாவில் இருந்து பாதுகாக்கும், 'உயிர் கவசம்' என்கிறார், சரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி.கெரோனாவுக்கு மருந்து...கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்றால், 'முக கவசம்' மட்டுமே. இன்றைய சூழலில் அனைவருக்குமான ஒரே ஆயுதம். சரியான முறையில் முக கவசத்தை பயன்படுத்தினாலே, 90 சதவீதம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம். காரணம், தொலைபேசி, லிப்ட், கதவு, கைப்பிடி என, தொடுதல் மூலமாக தொற்று பரவும் தன்மை வெகுவாக குறைந்துவிட்டது.மூச்சு காற்று மற்றும் எச்சில், தும்மல், இருமல் போன்ற நீர் திவலைகள் மூலமே தற்போது பரவி வருகிறது. மூக்கு, வாய் இந்த இரு வழிகளில் மட்டுமே வைரஸ் கிருமி உள்ளே நுழைகிறது. எனவே முக கவசம் பயன்படுத்தினாலே வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.அணியும் போது பின்பற்ற வேண்டியது...மக்களுக்கு சாதாரண துணியால் ஆன முக கவசமே போதும். சிலர், பிறருடன் பேசும்போது கழற்றி விடுகின்றனர். இது தவறான அணுகு முறை. எப்போது வெளியே செல்லும் போதும், மூக்கு, வாய் பகுதிகளை முழுமையாக கவர் செய்யும்படி, இறுக்கமாக முக கவசம் அணிய வேண்டும். கையால் தொடக்கூடாது.வீடு திரும்பியதும், கைகளை நன்றாக கிருமிநாசினியால் சுத்தம் செய்து, முக கவசத்தை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு நாள் பயன்படுத்திய முக கவசத்தை, மறுநாள் நன்றாக துவைத்து வெயிலில் காய வைத்து, 'அயர்ன்' செய்து பயன்படுத்துவது மிக சிறப்பு.'நமக்கெல்லாம் வராது' என, பலரும் அலட்சியமாக உள்ளனர். முக கவசத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் தினமான இன்று, நாங்கள் வலியுறுத்துவது இது மட்டுமே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X