பொது செய்தி

தமிழ்நாடு

கடன் வரம்பை, 100 கோடியாக உயர்த்த வேண்டும்; ஏ.இ.பி.சி.,

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், அவசர கடன் பெறுவதற்கான, நிலுவை கடன் வரம்பை, 100 கோடியாக உயர்த்த வேண்டும் என, ஏ.இ.பி.சி., தலைவர் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து, அதன் தலைவர் சக்திவேல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதம்:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, இ.சி.எல்.ஜி.எஸ்., எனப்படும் அவசர கால கடன் வரம்பிலும் திருத்தம் செய்யவேண்டும். தற்போது நிலுவை கடன் வரம்பான, 25 கோடிக்கு 100 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தை கணக்கிட கூடாது. அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களையும் இந்த கடன் திட்டத்தில் பயன் பெறச் செய்யவேண்டும். இ.சி.எல்.ஜி.எஸ்., திட்டம், நுாறு சதவீதம் உத்தரவாதத்துடன் கூடிய கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.ஜூன் 26ல், அறிவிப்பில், எம்.எஸ்.எம்.இ.,க்கான முதலீட்டு வரம்பு, 50 கோடி என்றாலும், நிறுவனத்தின் வர்த்தகத்தை கணக்கிடுகையில், வரிகளின் மதிப்பு விலக்கப்படும் என்று, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை தெளிவுபடுத்தியுள்ளது.இந்த தளர்வு, அவசர கால கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான வரைமுறையிலும் பிரதிபலிக்க ேவண்டும். அதன்படி, 2019 - 20ம் நிதியாண்டுக்கான ஆண்டு வருவாய், 100 கோடியாக உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு, சக்திவேல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X