ஒரே பள்ளத்தில் 9 சடலங்களை வீசி எறிந்த கொடுமை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
coronavirus, covid 19, coronavirus dead bodies, karnataka, ballari, coronavirus outbreak

பல்லாரி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒன்பது சடலங்களை, மனிதாபிமானம் இல்லாமல், ஒரே பள்ளத்தில் வீசி எறிந்த வீடியோ, பல்லாரியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பல்லாரியில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை, வேன் மூலம் கொண்டு வந்து, ஒரே பள்ளத்தில் வீசும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இந்த வீடியோவில், ஒன்றன் பின், ஒன்றாக மூன்று சடலங்களை, முழு பாதுகாப்பு உடை அணிந்த நான்கு ஊழியர்கள், வேனிலிருந்து இறக்கி, இழுத்து வந்து, ஏற்கனவே அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வீசுகின்றனர்.


latest tamil news




அப்போது, 'நிதானமாக போடுங்கள்' என்று ஊழியர் ஒருவர் கூறுகிறார். மற்றொரு ஊழியர், பள்ளத்தை பார்த்து, தன் விரல்களால் எண்ணி, 'பள்ளத்தில் எட்டு சடலங்கள் உள்ளன; இன்னும் ஒரு சடலம் வர வேண்டும்' என்கிறார்.வீடியோ பதிவு செய்யும் நபர், 'அனைத்து சடலங்களையும், இதே பள்ளத்தில் போட்டுவிடுங்கள், மூடிவிடலாம்' என்கிறார்.

வீடியோவில், மூன்று சடலங்களை மட்டும் இழுத்து வருவது தெரிகிறது. ஆனால், ஊழியர்கள் கூற்றுப்படி, ஒன்பது சடலங்கள், ஒரே பள்ளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், பல விதமான கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.பல்லாரி மாவட்ட கலெக்டர் நகுல், நேற்று கூறியதாவது:பல்லாரியில் இரண்டு நாட்களாக, ஒன்பது பேர், கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை, குக்கரஹட்டி என்ற ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைக்கப்பட்டன.

சடலங்களை மனிதாபிமானமற்ற முறையில் புதைத்து இருந்தால், அத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஊழியர்கள் செயல் பாட்டை கவனிக்காத மருத்துவ அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும்படி, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஸ்ரீராமுலு உத்தரவிட்டார்.பல்லாரியில் நடந்த சம்பவம், மனிதாபிமானமற்ற செயல், மிகவும் வருத்தத்துக்குரியது. கொரோனாவால் இறந்தவர்களை கவுரவத்துடன் அடக்கம் செய்யுங்கள். மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம். அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல.எடியூரப்பாமுதல்வர்

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dubuk U - Chennai,இந்தியா
01-ஜூலை-202011:11:46 IST Report Abuse
Dubuk U ப ஜ க வின் எடியூர்யாப்பா ஆளும் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் .. என தொடங்க வேண்டுமே
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
01-ஜூலை-202010:51:42 IST Report Abuse
Ram இதெல்லாம் ஒரு செய்தி என்று போடுகிறீர்கள், அவர்களின் உற்றார் உறவினர் கைவிட்டதால்தான் இவர்கள் சென்று புதைக்கிறார்கள், அவர்களுக்கும் காரோண பயம் இருக்கத்தானே செய்யும் ,
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஜூலை-202010:44:52 IST Report Abuse
அசோக்ராஜ் உயிருள்ள பேஷண்டுகளையே வாட்டி வதைக்கும் எந்திரம் பிணங்களை மதிக்கவா செய்யும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X