தமிழ்நாடு

திட்டம் கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க...: மாவட்டத்தில் முகாம் நடத்துகிறது சுகாதாரத்துறை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தேனி: மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 55 ஆயிரம் முதியவர்களை பாதுகாக்க இம்மாதம் (ஜூலை) முழுவதும் கிராமங்களில் சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்த பொதுசுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் இன்று துவங்குகிறது.

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து நேற்று வரை பாதிப்பு 712 ஆனது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தொற்று ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாகும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 20 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 161 பேர் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனர். இதில் முதியவர்கள் தொற்றா நோய்களான நீரழிவு, இருதய நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக நோய், புற்றுநோய் ஆகியவற்றிற்கு தொடர் சிகிச்சை பெறுவோராக இருந்தால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இதனை உணர்ந்து பொதுசுகாதாரத்துறை சார்பில் மாநிலத்திலேயே முதன்முறையாக சிறப்பு நலவாழ்வு முகாம் தேனி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடக்கிறது.

இன்று முதல் இம்மாதம் முழுவதும் வட்டார மருத்துவ அலுவலர்களால் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படுகிறது. முதியோர்களுக்கு சிறப்பு கவனிப்பு, தொற்று தடுப்பு ஆலோசனை வழங்கப்படும்.முகாம் விபரம்:இம்முகாம் இன்று ஆண்டிபட்டி ஒன்றியம் பந்துவார்பட்டி கலைவாணர் பள்ளியிலும், கொத்தப்பட்டி, தர்மத்துப்பட்டியில் துவங்குகிறது.

நாளை (ஜூலை 2 ) சிலோன்காலனி, திருமலாபுரம் மேற்கு தெரு, ஆண்டிபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, அணைக்கரைபட்டி, போடி -பத்திரகாளிபுரம், மணியம்பட்டி, குரங்கணி , கொலுக்குமலை, சின்னமனுார்- ஓடைப்பட்டி, எரசக்கநாயக்கனுார், சின்ன பொட்டிபுரம், புலிக்குத்தி, எஸ். தர்மத்துப்பட்டியில் நடக்கிறது.

மேலும் சின்னமனுார் நகராட்சி 1-5 வார்டு, கம்பம்- சாமாண்டிபுரம், மஞ்சக்குளம், திருவள்ளுவர் காலனி, க.புதுப்பட்டி, கே.கே.பட்டி. க.மயிலாடும்பாறை- தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம், பழனித்தேவன்பட்டி, முத்துரங்காபுரம், பொன்னம்மாள்பட்டி, அடைக்கம்பட்டி, ஆத்துக்காடு, ஏழாயிரம் பண்ணை, பெரியகுளம்- ஜி.கல்லுப்பட்டி, நகராட்சி 1,2,3 வார்டுகள், தேனி- அரண்மனைப்புதுார், முல்லைநகர், அம்பாசமுத்திரம், கோபாலபுரம், காட்டு நாயக்கன்பட்டி, ஜங்கால்பட்டி, சமத்துவபுரம், உத்தமபாளையம்- கோம்பை, ஆனைமலையான்பட்டி, தேவாரம்,டி. சிந்தலைசேரி, பி.பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. அடுத்தடுத்த நாட்களுக்கான ஊர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X