பொது செய்தி

தமிழ்நாடு

ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல் தலை காட்டாமல் இருப்பது நலம்: போலீஸ் ரோந்து தீவிரமாகும்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:இன்று முதல், 31ம் தேதி வரை நள்ளிரவு, 12:00 மணி வரை, புதிய நிபந்தனைகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி வரை பொது போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், வரும், 15ம் தேதி வரை இயங்காது. ஆட்டோ, டாக்ஸிகள், ஏற்கனவே உள்ள விதிமுறையை பின்பற்றி இயங்கலாம். ஓட்டல், டீக்கடைகள் மற்றும் கடைகளுக்கு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.இருப்பினும், வரும் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மருந்துக்கடை மட்டும் திறந்திருக்கும்.
கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:ஞாயிற்று கிழமைகளில், முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், வெளியே வரலாம். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். மருந்துக்கடை உட்பட, அத்தியாவசியமான கடைகள் மட்டும், குறைவான நேரம் மட்டும் இயங்கும்.இதுகுறித்து அரசிடம் இருந்து முழுமையான வழிகாட்டு அறிக்கை வெளியிடப்படும். போலீசாரின் கண்காணிப்பு பலமாக்கப்படும். மக்களுக்கு அத்தியாவசிய தேவை பாதிக்காத வகையில், ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X