முத்திரை பதிக்கும் திருப்பூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முத்திரை பதிக்கும் திருப்பூர்

Added : ஜூலை 01, 2020
Share

கொரோனா பரவலைத் தொடர்ந்து, முக கவசங்களுக்கான தேவை அதிகரித்தது. ஜவுளித்துறையில் கோலோச்சி வரும் நம் நாட்டில் கூட, முக கவசங்கள் போதுமான அளவு இருப்பில் இல்லை.ஊரடங்கால் முடங்கியிருந்த, ஜவுளி, பின்னலாடை நிறுவனங்கள், முக கவசம் தயாரிக்க களமிறங்கின. திருப்பூர் பின்னலாடைத்துறையினர், முக கவசம் தயாரிப்புக்கான ஆர்டர்களை, அதிகளவில் பெற்று வருகின்றனர்.
இதற்கு காரணம், தரத்துடன் தயாரிப்பதுதான்.சாதாரண முக கவசங்கள் மட்டுமல்லாது மருத்துவ முக கவசங்கள் தயாரிப்பிலும், நம் நாடு 'தற்சார்பு' நிலையை அடைந்திருக்கிறது. முக கவசங்கள் ஏற்றுமதிக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.தற்போது, திருப்பூரின் முக்கிய நிறுவனங்கள் பலவும், பிராண்டட் முக கவசங்களைத் தயாரித்து வருகின்றன.வண்ண வண்ணத்துணிகள், விதவிதமான மாடல்கள் என, பின்னலாடைக்குப் பிரசித்தி பெற்ற திருப்பூர் தற்போது முக கவச வடிவமைப்புக்காகவும் பாராட்டப்படுகிறது. கொரோனா, வேறு வாய்ப்புகளையும் தொழில்துறையினருக்கு வழிகாட்டியிருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X