பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 99.23 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மூணாறு:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.23 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில் 98.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இடுக்கி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11,472 பேரில் 11,384 பேர் தேர்ச்சி பெற்று அதன் சதவீதம் 99.23 ஆக இருந்தது. 59 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 122 பேர் அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ஏ-பிளஸ் கிரேடு பெற்றனர்.

மூணாறைச் சுற்றிலும் தமிழ்வழிக்கல்வி பயிலும் ஒரு சில பள்ளிகளில் ஒருவர் தேர்ச்சி பெறாததால்,100 சதவிகிதம் தேர்ச்சி என்ற இலக்கை இழந்தனர். சோத்துப்பாறை அரசு உயர் நிலைப்பள்ளி தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் மற்றும் பாத்திமா மாதா உயர் நிலை பள்ளி 7 ஆண்டுகள் நுாறு சதவிகிதம் தேர்ச்சியை தக்க வைத்துக் கொண்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X