பொது செய்தி

தமிழ்நாடு

9 லட்சம் பேருக்கு வேலை உருவாக்க புதிய திட்டம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:உணவு பதப்படுத்துதல் துறையில், 9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மத்திய அரசு புதிய திட்டத்தை துவக்கியுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:உணவு பதப்படுத்துதல் துறை, முறைப்படுத்தாத துறையாக உள்ளது. இதில், குறு (மைக்ரோ) நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம். ஒன்பது லட்சம் வேலைவாய்ப்பு மற்றும் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை உருவாக்கும் வகையில், பிரதமரின் குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள, எட்டு லட்சம் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பயன்பெறும்.வரும், 2024-25ம் ஆண்டு வரை, இது செயல்படுத்தப்பட்டு வரும். திட்டச்செலவில், மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்கும். தமிழகத்தில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X