சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்க உத்தரவு

Added : ஜூலை 01, 2020
Share
திருப்பூர்:பனியன் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை:தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த மே 20ல் வெளியிட்ட உத்தரவுப்படி, ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணங்களை, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து,

திருப்பூர்:பனியன் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை:தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த மே 20ல் வெளியிட்ட உத்தரவுப்படி, ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணங்களை, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து, தீர்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது, சுற்றுச்சூழல் தர நிலைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்; இதனை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி அனைத்து நிறுவனங்கள், சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி இயங்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X