பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ், டி. ஆர்.ஓ. ரமேஷ், பெரியகுளம் சப் -கலெக்டர் சினேகா, நகராட்சி ஆணையாளர்கள், பொது சுகாதார துறை அலுவலர்கள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர். பின்னர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவமனை, சுப்பன் தெருக்களில் ஆய்வு செய்தார்.

நிருபர்களிடம் கார்த்திக் கூறுகையில், '' தேனிக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்தது. இவர்களின் தொடர்பில் இருந்தோரை உடனே பரிசோதித்து அறிகுறியுள்ளோர் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். கொரோனாவிற்கு ஆயிரம் படுக்கை தயாராக உள்ளது. கூடுதலாக 1600 படுக்கை தயாராகிறது.

பரிசோதனை கருவிகள் தேவையான அளவு உள்ளன. சோதனை முடிவு 3 மணிநேரத்தில் வழங்கும் நவீன மிஷின் ஓரிரு நாளில் வர உள்ளது. தேனி, பூதிப்புரம், சின்னமனுார், கைலாசபட்டி கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது, என்றார். சுப்பன்தெருவில் நடமாடும் ஏ.டி.எம்., வசதி செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X