பொது செய்தி

தமிழ்நாடு

மேற்குபதியில் கர்ப்பிணிக்கு தொற்று :கிராமத்தினருக்கு மருத்துவ பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 மேற்குபதியில் கர்ப்பிணிக்கு தொற்று :கிராமத்தினருக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பூர்:மேற்குபதியில், கர்ப்பிணிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரது மளிகை கடைக்கு வந்து சென்ற அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடந்தது.திருப்பூர் ஒன்றியம், மேற்குபதி ஊராட்சி பகுதியில், மளிகை நடை நடத்தி வருபவர்களின், மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணியான, 35 வயது மகள், சிகிச்சைக்காக அடிக்கடி கோவை சென்று வந்ததால், கொரோனா தொற்று பரவியுள்ளது.நேற்று முன்தினம் தொற்று உறுதியானதும், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராமப்பகுதிகளில், கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் துாவி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கர்ப்பிணியின் குடும்பத்தினர், மளிகை கடைக்கு வந்து சென்றவர், அருகில் வசிப்பவர் என, 30 நபர்களுக்கு, நேற்று சளி மாதிரி எடுக்கப்பட்டது.பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதிரி எடுத்து, பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா கால்பதிக்காமல் இருந்த, திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்குள் தொற்று பரவியதால், 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக, மேற்குபதி ஊராட்சி கிராமங்களுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரோடுகள் அடைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X