கடை அடைப்புக்கு எதிர்ப்பு :ஊராட்சி அலுவலகம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடை அடைப்புக்கு எதிர்ப்பு :ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஜூலை 01, 2020
Share

அனுப்பர்பாளையம்:மதியம், 2:00 மணிக்கு மேல் கடை அடைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, வியாபாரிகள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருப்பூர் வடக்கு ஒன்றியத்திலுள்ள பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம் உட்பட, பத்து ஊராட்சிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, ஹோட்டல், மற்றும் பிற கடைகள் மதியம், 2:00 மணியுடன் அடைக்க வேண்டும், என அந்தந்த ஊராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.இதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, பெருமாநல்லுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுயிட்டனர். 'மதியம், அடைத்தால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். மாலை, 5:00 மணிக்கு மேல்தான் பனியன் தொழிலாளர்கள் பணி முடிந்து வந்து பொருள் வாங்குவர். அதனால், மாலை, 7:00 மணி வரை கடை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.இதனால், 2ம் தேதி (நாளை) முதல், மாலை, 6:00 மணி வரை கடை திறந்திருக்க ஊராட்சி சார்பில், அனுமதி வழங்கப்பட்டது. இதனால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X