சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தேனி:தேனிமாவட்டத்தில் போலீஸ்காரர்கள், குடும்பத்தினர் உட்பட 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் 62 ஆண், 24 வயது பெண், தேனி காவலர் குடியிருப்பை சேர்ந்த 24, 40 வயது போலீஸ்காரர்கள், பழனிச்செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி., காலனி 45 வயது ஆண், பழைய டி.வி.எஸ்.ரோடு 45 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வைகை அணை 35 வயது பெண் எஸ்.ஐ., அவரது 41 வயது கணவர், 8, 4 வயது மகன்கள், 54 வயது மாமியார், கொண்டமநாயக்கன்பட்டி 36 வயது பலசரக்குக்கடை உரிமையாளர், தங்கமாள்புரம் 67 வயது முதியவர் பாதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி 53 வயது பெண், தாமரைக்குளம் 46 வயது ஆண், பங்களாபட்டி 27 வயது பெண், வடகரை வைத்தியநாதபுரம் 37 வயது ஆண், வரதப்பர் தெரு 61 வயது முதியவர், ஒரு வயது ஆண் குழந்தை, ஜெயமங்கலம் டீ கடையின் 36 வயது உரிமையாளர், தேவதானப்பட்டி 36 வயது ஆண் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

உத்தமபாளையம் ஒன்றியம் கம்பம் முனிசிபல் ஆபீஸ் ரோடு 70 வயது முதியவர், உமர்பாட்ஷா தெரு 27 வயது ஆண், ஆங்கூர்பாளையம் 16 வயது வாலிபர், ராயப்பன்பட்டி 41 வயது போலீஸ்காரர், கூடலுார் ஆரம்ப சுகாதார நிலைய 35 வயது தற்காலிக பணியாளர், ராயப்பன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கம்பம் நேருஜிநகர் 31 வயது பெண் ஊழியர், கூடலுார் தெற்கு 35 வயது பெண் போலீஸ்காரர், க.புதுப்பட்டி வடக்குத்தெரு 42 வயது போலீஸ்காரர், திருச்சி லால்குடியை சேர்ந்த பழனி பாட்டாலியன் க.புதுப்பட்டி சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்த 30 வயது போலீஸ்காரர் உட்பட மாவட்டத்தில் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


6 பேர் 'டிஸ்சார்ஜ்'

கம்பம் கோம்பை ரோடு 72 வயது மூதாட்டி, 15 வயது வாலிபர், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர், 23 வயது பயிற்சி ஆண் டாக்டர்கள், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த 41 வயது பெண் என, 6 பேர் குணமடைந்ததால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X