பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடி தரும் நிறுவனங்கள் எம்.பி.,யிடம் பெண்கள் மனு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுவினர் எம்.பி., சுப்பராயனிடம் அளித்த மனு:வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நாங்கள் குழு கடன் பெற்றுள்ளோம். அவ்வகையில், நிதி நிறுவனங்கள் தற்போது கடன் தவணையை செலுத்துமாறு நெருக்கடி தருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு மற்றும் தொழில் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளவர்களிடம் நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிக்கும் அபராத வட்டியை தள்ளுபடி செய்யவும், கடன் தவணைக்கு கால அவகாசம் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X