சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி, 3 வயது சிறுவன் பலி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 கார் மோதி, 3 வயது சிறுவன் பலி

திருப்பூர்:பெருமாநல்லுாரில் கார் மோதிய விபத்தில், மூன்று வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், காளம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் - அகிலாண்டேஸ்வரி தம்பதியரின் மகன் கபிலன், 3. நேற்று முன்தினம், மாலை குடும்பத்துடன் கடைக்கு சென்றனர். அப்போது, ரோட்டில் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது, வேகமாக வந்த கார் மோதிவிட்டு சென்றது.படுகாயமடைந்த, இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே கபிலன் இறந்தார். அகிலாண்டேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அதே கார், அய்யன்தோட்டத்தில் டூவீலர் மீது மோதியது. அதில், கேசவன் என்பவர் காயமடைந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர்.சாலை மறியல்இந்நிலையில், சிறுவனின் சடலத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர், உறவினர்கள், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்தி சென்றவரை கைது செய்ய வலியுறுத்தினர். தெற்கு போலீசார் பேச்சு நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதன்பின், கார் ஓட்டிய அவிநாசியை சேர்ந்த சிவக்குமார், 42 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X