பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கு 6.0'--ல், காரியத்தில் கவனம்! தொழில் துறையினர் சாதிக்கலாம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:'ஊரடங்கு 6.0' காலத்தை, கவனம் சிதறாது, தொழில்துறை முடக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான நேரமாக கருதி, தொழில்துறையினர் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஊரடங்கு, ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடரும் நிலையில், பொருளாதாரம் மற்றும் தொழில் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரத்துடிக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு, கட்டுப்பாடுகள் நீடிக்காவிட்டால், தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்பது யதார்த்தம்.திருப்பூர் மற்றும் ஊரகப் பகுதிகளில், பின்னலாடை நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை, தொழிலாளர்களின் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக, வரும் 15ம் தேதி வரை பஸ்களும் நிறுத்தப்படுவதால், வெளிமாவட்ட தொழிலாளர் வருகையில் சிக்கல் ஏற்படும். தொழிற்சாலைகளில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் அதே தருணம், பொது இடங்களில், தொற்று அபாயத்தை குறைக்க, இத்தகைய வழிமுறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு இருக்கிறது.பின்னலாடை நிறுவனங்கள், திருப்பூரில் மட்டுமல்லாமல், கோவை, ஈரோடு என அண்டை மாவட்ட எல்லைகளிலும் உள்ளன. அந்தந்த மாவட்ட தொழிலாளர்களை, அந்தந்த பகுதி நிறுவனங்கள் மட்டும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் திட்டமே, இப்போது கைகொடுக்கும்.சாம்பிள் தயாரிப்பாகட் டும், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆர்டராகட்டும்; பணிகளை நிறுத்தாமல், தொடர்வதற்கு, மாவட்ட நிர்வாகத்தினரும், பின்ன லாடை நிறுவனத்தினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதற்கேற்ற வகையில், வாய்ப்பை, பின்னலாடை நிறுவனத்தினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பின்னலாடை என்றில்லாமல், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனத்தினருக்கும் இது பொருந்தும்.தொற்று எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைப்பதற்கும், கொரோனா என்பதே இல்லாமல் செய்வதற்கும், மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், பிற மாவட்டங்களைக் காட்டிலும், திருப்பூர் மாவட்டத்துக்குத்தான் பாதிப்பு அதிகம். காரணம், தொழில் சார்ந்த மாவட்டத்தில், தொழில் மேற்கொள்வதற்கான சூழலை, அது கட்டுப்படுத்திவிடும் அல்லது தடை ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழலை உருவாக்க, மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் கூட விரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம்.குறிப்பாக, நகரில் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தால், அந்த இடங்களில், இயங்கும் ஒட்டுமொத்த நிறுவனங்களும் பாதிக்கப்படும். பின்னலாடை நிறுவனங்கள் பலவும், உற்பத்திச் சங்கிலியை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.ஒரு நிறுவனம் பாதிக்கப்படும்போது, அது சார்ந்த பல நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே, அந்த நிலை உருவாகிவிடக்கூடாது.'ஊரடங்கு 6.0' காலத்தை, செயல்பாட்டுக்கான நேரமாகக் கருதும் அதேசமயம், கவனத்து டனும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் தொழிலில் சிறப்பதற்கான யுத்தியை, பின்னலாடை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X