பொது செய்தி

தமிழ்நாடு

'ஜிம்'மை திறங்க; குமுறும் 'பாடி பில்டர்கள்'

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 'ஜிம்'மை திறங்க; குமுறும் 'பாடி பில்டர்கள்'

திண்டுக்கல்:ஆணழகன் போட்டிக்கு தயாராகும் வகையில், கொரோனா ஊரடங்கால் மூடியுள்ள 'ஜிம்'மை திறக்க வேண்டும் என 'பாடி பில்டர்கள்' கோரிக்கை வைத்துள்ளனர்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். இதற்கென செயல்படும் 'ஜிம்'கள், யோகா மையங்கள் கொரோனா ஊரடங்கால் நுாறு நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட 'ஜிம்'கள் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு ஜிம்களிலும் குறைந்தது 150 பேர் வரை உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

முடி திருத்தம், அழகு நிலையங்களை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஜிம்களை திறக்க இன்னும் தடை தொடர்கிறது. அதனால் ஆணழகன் போட்டிகளுக்கு தயாராகி வரும் 'பாடி பில்டர்கள்' தவிக்கின்றனர்.

வீட்டிலேயே பயிற்சி

லாரன்ஸ், உடற்பயிற்சி மாஸ்டர்:

ஜிம்மில் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சியை வீட்டில் மேற்கொள்ள முடியாது. சில வகை பயிற்சிகளையே செய்யலாம். சரியான உணவு, நடைப்பயிற்சி செய்தாலே உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியும். உடல் எடையை அதிகரிக்க நினைக்கும் பாடிபில்டர்களுக்கு ஜிம்மை திறப்பது கட்டாயம். போட்டிக்கு தயாராகி வருபவர்கள் வீட்டிலேயே சிறிய கருவிகளை வைத்திருப்பர். ஜிம் திறக்காததால் பயிற்சியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கருவிகளை கையாள வேண்டும்

சதிஷ்குமார், பாடி பில்டர்:

எல்லோராலும் வீட்டில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி வைக்க முடியாது. ஜிம் மூடியுள்ளதால் போட்டிக்கு தயாராகி வருபவர்கள் முறையான பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை. திண்டுக்கல்லில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட 'பாடி பில்டர்கள்' உள்ளனர். ஆணழகன் போட்டியில் வெல்ல ஜிம்மிற்கு செல்வது அவசியம். வேறு வழியின்றி வீட்டிலேயே சில பயிற்சிகளை மேற்கொள்கிறேன். கட்டுடலுக்கு கருவிகளை கையாளுவது அவசியம். காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு 'ஜிம்'மை திறக்க அனுமதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X