ஒரே நாளில் 500 பேருக்குகொரோனா பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 500 பேருக்குகொரோனா பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருவோர், ஏற்கனவே கொரோனா உள்ளவர்கள் மூலமாக பரவுதல் உள்ளிட்ட பல காரணங்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, தனிமைப் படுத்தப்படுவோர், அறிகுறிகள் உள்ளவர்கள் என 500 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முடிவு மறுநாள் காலைக்குள் தெரியவரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X