தமிழ்நாடு

வேகமெடுத்தது திண்டுக்கல்லில் கொரோனா தொற்று பரவல்: இனியும் அலட்சியம் வேண்டாம் மக்களே

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தைப் பொறுத்தவரை முழுஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட 120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பின் தினமும் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோரால் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கு சென்று திரும்பிய 90 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த 20 நாட்களில் படிப்படியாக அதிகரித்து நேற்று பாதிப்பு அதிகபட்சமாகியுள்ளது. நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா, பாதிக்கப் பட்டவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவ தொடங்கியுள்ளது. இதனால் நேற்று ஒரேநாளில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


அலட்சியம் வேண்டாம்


மாவட்டம் முழுவதும் இருந்தாலும், நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், பழநி பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது. இனியும் பொதுமக்கள்நமக்கு வராது என அலட்சியமாக இருந்தால் பாதிப்பு எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். எனவே, அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.திண்டுக்கல்லில் இதுவரை இல்லாத உச்சகட்ட பாதிப்பு இது என்பதால், சமூக பரவலாக மாறிவிட்டதாகவே தோன்றுகிறது. மும்பை, சென்னை, மதுரை நகரங்களைப் போன்று திண்டுக்கல்லுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் கட்டாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X