சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை வியாபாரிகளால் கொரோனா பரவ வாய்ப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் மதுரை வியாபாரிகளால் கொரோனா பரவுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோயம்பேடு, மதுரை பரவை, கோவை உள்ளிட்ட பெரிய காய்கறி மார்க்கெட்கள் மூடப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.போன்கள் வாயிலாகவும் ஆர்டர் செய்கின்றனர். இதனால் இங்கு வரும் மதுரை வியாபாரிகள் மற்றும் மதுரைக்கு சென்று காய்கறிகளை இறக்கிவிட்டு வரும் டிரைவர்கள் மூலம் கொரேனா பரவ வாய்ப்புஉள்ளது.

எனவே அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்கெட் சங்க நிர்வாகிகள் மதுரையில் இருந்து வியாபாரிகள் வந்தால் நகராட்சிக்கு தகவல் அளிப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X