தனியார் துறை திறமைகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்| Centre intensifies efforts to improve private sector | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தனியார் துறை திறமைகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (9)
Share
india, private sector, modi government

அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும், காலியாக உள்ள பல முக்கிய பணியிடங்களை நிரப்பவும், தனியார் துறைகளில் சிறப்பாகச் செயல்படுவோரை ஈர்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி, பல துறைசார் நிபுணர்களுக்கு, தன் அமைச்சரவையில் இடம் கொடுத்து, புதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தினார்.


1,300 இயக்குனர்அதைத் தொடர்ந்து, அரசு பணியிலும், 'லேட்டரல் என்டரி' எனப்படும், தனியார் துறைகளில் பணிபுரிவோரை அரசுப் பணியில் சேர்க்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.அதன்படி, ஒன்பது துறைகளுக்கான இணைச் செயலர் பதவிக்கு, தனியார் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தோர் நியமிக்கப்பட்டனர்.வழக்கமாக, இணை, உதவி செயலர் பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள், ஐ.பி.எஸ்., எனப்படும் இந்திய போலீஸ் சேவை, ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை, ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரிகளே நியமிக்கப்படுவர்.
தற்போது, இந்த அதிகாரி களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


latest tamil news
மாநிலங்களில் இருந்து, இந்த அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பும்படி, மத்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டது. ஆனாலும், அதிகமானோர் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. நல்ல அதிகாரிகளை அனுப்ப, மாநில அரசுகளும்
தயாராக இல்லை.அதனால், பல இடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளன. நிர்வாகச் செயல்பாடு தடைபடுவதை தவிர்க்க, தற்போது, பல உயர்நிலை அதிகாரிகள் பணியிடங்களுக்கு, தனியார் துறையைச் சேர்ந்தவர் களை நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் மூலம், திறமையானவர்கள் அரசு பணிக்கு கிடைப்பர்; பணியிடங்களும் நிரப்பப்படும். தனியார் துறையில் சிறப்பாக பணியாற்றியவர் களின் அனுபவம், அரசு நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்தும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை.மத்திய அரசில், 1,300 இயக்குனர்கள் மற்றும் உதவி செயலர் பணியிடங்கள் உள்ளன.


38 நிபுணர்கள்இதில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு பணி விதிகளில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது.மத்திய அரசில் இயக்குனர் அல்லது உதவி செயலராக, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே, இணைச் செயலராக பதவி உயர்வு கிடைக்கும் என, சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.இருப்பினும், தற்போது காலியாக உள்ள, 400 பணியிடங்களை, தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பும் நடவடிக்கை துவங்கியுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பும், இயக்குனர், உதவி செயலர் பதவிகளுக்கு, தனியாரைச் சேர்ந்த, 38 நிபுணர்களை சமீபத்தில் நியமித்துஉள்ளது. - நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X