பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கொரோனா சமூக பரவலா கண்காணிப்பு அலுவலர் பேட்டி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'திண்டுக்கல்லில் கொரோனா சமூக பரவல் இல்லாததால், தற்போது முழு ஊரடங்கு தேவையில்லை' என, கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா கூறினார்.
தினமலர் இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


திண்டுக்கல்லில் தினமும் பாதிப்பு அதிகரிக்கிறதே?

வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வருவோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் பரிசோதனையின் அளவு அதிகரித்திருப்பதால் நோயின் தாக்கம் அதிகரித்திருப்பது போல் தெரிகிறது. ஆனால், கொரோனா கட்டுக்குள் உள்ளது என்பதே உண்மை.


கொரோனாவை தடுக்க சிறப்பு திட்டம் எதுவும் உள்ளதா?

சுய கட்டுப்பாடும் அரசின் அறிவுரைகளை சரியாக பின்பற்றி தனிமைப்படுத்தி இருப்பதுமே கட்டுப்படுத்தும் வழிமுறை. நோயால் பாதித்து, அறிகுறி இல்லாமல் இருப்பவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளுக்கு வெளியேயும் படுக்கை வசதிகளுடன் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்?

நோயாளிகளின் பாதிப்பை பொறுத்து ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டுதல்படி, சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு மட்டுமே ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நோய் தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப் படுமா?



பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்து தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம், போலீஸ், சிறைத்துறையினர் மற்றும் வணிகர்களுக்கு ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.


வீடு வீடாக பரிசோதனை செய்யும் திட்டம் உள்ளதா?

தற்போது வரை அத்திட்டம் இல்லை. அரசின்மேல்மட்ட குழு முடிவைப் பொருத்தது அது.


மக்கள் செய்ய வேண்டியது?



தேவையின்றி வெளியே சுற்றுவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்ப்பது, அடிக்கடி கைகளை கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுய ஒழுக்கத்துடன் தங்களுக்கும், மற்றவருக்கும் நோய் பரவாமல் தடுத்தால் மட்டுமே நோய் தாக்காமல் தங்களை பாதுகாக்க முடியும்.


திண்டுக்கல்லுக்கு முழு ஊரடங்கு தேவையில்லையா?

தற்போது முழு ஊரடங்கு தேவையில்லை. நோயின் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் அது குறித்து முடிவு செய்யலாம்.


திண்டுக்கல்லில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா?

இதுவரை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X