ஆசையா 'டெண்டர்' விடுவாங்க அப்புறமா பணியை கைவிடுவாங்க குமுறும் சின்னாளபட்டி மக்கள்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சின்னாளபட்டி:சின்னாளபட்டி பேரூராட்சி அருகே கலிக்கம்பட்டி ஊராட்சி உள்ளது. பேரூராட்சி முதல் கலிக்கம்பட்டி கலைமகள் காலனி வரையான ஒன்றிய நிர்வாகத்தின் கீழுள்ள 3 கி.மீ., ரோடு சேதமடைந்துள்ளது. இது பேரூராட்சியின் வடக்குத்தெரு, கள்ளர் பள்ளி பகுதிகளின் மயான பாதையாகவும் உள்ளது.

இப்பாதையை சரிசெய்ய கலிக்கம்பட்டி பகுதி பள்ளி மாணவர்கள் மனுகொடுத்து வலியுறுத்தினர். இதையடுத்து 7 மாதங்களுக்கு முன் ரோட்டை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. இன்றுவரை பணி கிடப்பில் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குவிக்கப்படும் குப்பைகளும், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

இப்பகுதியினர் கருத்து:

கிடப்பில் உள்ள பணி

ஓ.தினேஷ்: பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளும் கடந்து செல்ல முடியவில்லை. இறந்தவர்களின் உடலை, மயானத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும், கடந்தாண்டு நவம்பரில் டெண்டர் விடப்பட்டதாக தெரிவித்தனர். இதுவரை பணி முடிக்காமல் கிடப்பில் விட்டுள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியம்

ஏ.முத்துக்கிருஷ்ணன்:
டெண்டர் விட்டபின்பு, மேற்பார்வை பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். பள்ளியை அடுத்துள்ள பாலத்தின் அருகே கழிவுகளை குவிக்கின்றனர். அது ஊராட்சி எல்லைப்பகுதி எனக்கூறி, குப்பையை திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் தவிர்க்கிறது. மழை நேரங்களில் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது இவற்றில் தீ வைத்து எரிப்பதால், புகை சூழ்ந்து பலர் சுவாச பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X