சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...திண்டுக்கல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கர்ப்பிணி இறப்பு

நிலக்கோட்டை: சித்தர்கள்நத்தத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் மனைவி தனலட்சுமி, 29. ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார். மீண்டும் கர்ப்பமான தனலட்சுமிக்கு பரிசோதனையில் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாதது தெரிந்தது. நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனலட்சுமி இறந்த விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.

இளம்பெண் தற்கொலை

நத்தம்: கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி 27. தம்பதியரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

கொள்ளை முயற்சி

திண்டுக்கல்: ரவுண்ட் ரோடு தியேட்டர் அருகே உள்ள மளிகை கடையை சிலர் உடைக்க முயற்சித்தனர். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தால் அடுத்தடுத்த டீக்கடை, அலைபேசி கடைகளை உடைக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு அருகில் உள்ள காவலாளி வந்ததால் அவர்கள் தப்பினர். பெரும் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சி.சி.டி.வி., பதிவு அடிப்படையில் விசாரிக்கின்றனர்.

விபத்தில் பலி

ஒட்டன்சத்திரம்: சங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரவீன் 20, இருசக்கர வாகனத்தில் லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோட்டில் சென்றார். திடீரென டூவீலரை திருப்பியபோது, பின்னால் வந்த மினி லாரி மோதி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசில் திருமணம்

வடமதுரை: பிலாத்து கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் யுவராஜா 22. இவரது உறவினர் ஐஸ்வர்யா 21. இருவரும் வேடசந்துார் அரசு கல்லுாரிக்கு படிக்க ஒன்றாக சென்றபோது காதலர்களாகினர். படிப்பு முடிந்த நிலையில் யுவராஜா வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். பெண் தரப்பில் வடமதுரை மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின்னர் திருமணத்திற்கு யுவராஜா சம்மதித்தார். நேற்று மாலை ஸ்டேஷன் அருகே விநாயகர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

போலீைஸ கண்டித்து போராட முயற்சி

வேடசந்துார்: தாடிக்கொம்பு அகரம் பிரிவில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜோசப் 40. கடை திறப்பு தொடர்பாக ரோந்து எஸ்.ஐ., சேகருக்கும், ஜோசப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோசப்பை எஸ்.ஐ., தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். ஜோப்பின் உறவினர்கள் போலீசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தனர். எஸ்.ஐ.,மீது அவர்கள் மனுகொடுத்ததால், டி.எஸ்.பி., டி.எஸ்.பி., வினோத், இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X