பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சிலவரிகளில்...திண்டுக்கல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

இணையத்தில் ஜமாபந்தி

கொடைக்கானல்: தாண்டிக்குடி, கொடைக்கானல், பண்ணைக்காடு பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை ஜூன் 29 முதல் ஜூலை 15 வரைஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மனுக்களை தனி மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வார். இ சேவை மற்றும் தனிமுகவர்கள் மூலம் https://gdp.tn.gov.in/jamabanthi என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆட்டோக்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்: வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் ஆட்டோ, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. வாகன ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இன்று (ஜூலை 1) முதல் 15 ம் தேதி வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுஉள்ளதால் அத்தியாவசிய தேவைக்கு ஆட்டோக்களில் அதிகம் பயணிப்பர். இரண்டு பயணிகளுக்கு மேல் ஏற்றக் கூடாது. பயணிகள் இறங்கியதும் வாகனத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

புள்ளி விவரம் சேகரிப்பு

திண்டுக்கல்: கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தது: தேசிய புள்ளி விவர அலுவலக திட்டத்தில் விவசாயிகளின் நிலைமை, நிலம், கால்நடை, கடன் மற்றும் முதலீடு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல், ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பு அலுவலர்கள், வீடுகளுக்கே வந்து விவரங்கள் சேகரிப்பர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முறிந்து விழும் முதிர்ந்த மரங்கள்

கன்னிவாடி: மூலச்சத்திரம்- - - கொடைரோடு ரோட்டின் இரு புறமும் பல மரங்கள் முதிர்ந்து, பலமிழந்து உள்ளன. அடிப்பகுதி அரிக்கப்பட்டு, பலத்த காற்று, மழைக்கு கிளைகள் முறிந்து விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. திருமலைராயபுரம், டி.பண்ணைப்பட்டி, தருமத்துப்பட்டி, பச்சைமலையான்கோட்டை, ஜம்புதுரைக்கோட்டை, காமலாபுரம் பகுதிகளிலும் விபத்து அபாயம் நீடிக்கிறது. விபத்து அபாய மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோதனைக்கு எதிர்ப்பு

வத்தலக்குண்டு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு அழைத்து செல்ல சுகாதாரத்துறையினர் முயற்சி செய்தனர். குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ''கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு வேளை தொற்று இருந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் பரவும்'' என சுகாதாரத் துறையினர் கூறினர். இருப்பினும் தொடர்பில் இருந்தவர்கள் மறுத்ததால் போலீசாருக்கு தகவல் கூறினர். அவர்கள்பாதித்த குடும்பத்தினரின் உறவுகள் மூலம் பேசி சமரசம் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X