பொது செய்தி

தமிழ்நாடு

தீட்சிதர்கள் வீடுகளில் 'நோட்டீஸ்' : சிதம்பரத்தில் பரபரப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Coronavirus, Chidambaram, Dikshitar, Chidambaram temple,
தீட்சிதர்கள் வீடுகளில் 'நோட்டீஸ்'
: சிதம்பரத்தில் பரபரப்பு


சிதம்பரம் :சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், 150 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த, 10 பேர் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்ததும், 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், 100க்கும் மேற்பட்டோர், 'கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன்' என கேட்டு, நகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர். பின், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
01-ஜூலை-202011:35:20 IST Report Abuse
Ray அரசு அதிகாரிக்கு ....
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
01-ஜூலை-202011:09:14 IST Report Abuse
P Karthikeyan இங்கே கருத்து என்ற பெயரில் கண்டதையெல்லாம் எழுதின மனசாட்சி இல்லாத மனிதர்களே ... தீக்ஷிதர்களை காக்கும் தார்மீக எண்ணம் இல்லாமல் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் போலி அரசியல்வாதிகள் எங்கே போனார்கள். கோயில் என்று சொன்னாலே அது தில்லை தான். தில்லை அம்பலத்தான் தன் அடையாளத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது . பொறுத்திருங்கள் .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஜூலை-202010:37:13 IST Report Abuse
அசோக்ராஜ் திராவிஷ ஆட்சியில் கிரிப்டோக்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் செய்யும். மாநில அரசு ஊழியர்களில் ஒரு பிராமின் கூட இல்லாத நிலைக்கு சிஸ்டமாடிக்காக கொண்டுவந்து விட்டோம். இந்துமதத்துக்கு நியாயம் செய்ய அரசாங்கத்தில் இப்போ ஆளே கிடையாது. ஆப்ரகாமிய அரசாங்கங்கள் தான் அடுத்த ஐம்பது வருடங்கள் நீடிக்கும். கோவில்கள் தப்புவது கடினம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X