போத்தனுார் குமரன் நகரில் குடிநீர் வீண்!

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

விஷப்பூச்சிகளின் கூடாரம்போத்தனுார், நஞ்சுண்டாபுரம், நேதாஜி நகரில், சாலையோரம் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இங்கு பழைய இரும்புகள் உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்படுகின்றன. இப்பகுதி, விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது.- சிவகுமார், நேதாஜி நகர்.

தரமில்லாத சாலைஇருகூர் பேரூராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட, காந்திநகர் முதல், ஜின்னிங் பேக்டரி வரையிலான, 2 கி.மீ.,ரோடு, கடந்த ஒரு மாதத்துக்கு முன், அமைக்கப்பட்டது. தரமின்றி சாலை அமைக்கப்பட்டதால், ஆங்காங்கே பொத்தலாகியுள்ளது.- வடிவேலு, இருகூர்.

பகலிலும் ஒளிருது தெருவிளக்குகள்மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட, மசக்காளிபாளையத்தில், பகலிலும், தெருவிளக்குகள் எரிகின்றன.- ருக்மணி, மசக்காளிபாளையம்.

சிக்னல் அருகே விபத்து அபாயம்திருச்சி ரோடு, சிங்காநல்லுார் சிக்னல் அருகில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது; இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- ஜெயராம், சிங்காநல்லுார்.

தாமரை நகரில் விளக்கு எரிவதில்லைகவுண்டம்பாளையம், கல்பனா திருமண மண்டபம் அருகே, தாமரை நகர் இரண்டாவது வீதியில் உள்ள, இரண்டு மின் கம்பங்களில், கடந்த சில மாதங்களாக, விளக்குகள் எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில், தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- ஜவஹர், தாமரை நகர்.

மேட்டூரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, மேட்டூர், ஐயப்பன் கோவில் ரோட்டில் உள்ள, மின்கம்பத்தில்(எண்: 11), கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- சரவணன், மேட்டூர்.

சாக்கடை கால்வாய்கள் அடைப்புசிங்காநல்லுார், அக்ரஹாரம் பகுதியில் உள்ள, அனைத்து சாக்கடை கால்வாய்களிலும், அடைப்பு ஏற்பட்டுள்ளது; கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- ரமணா, சிங்காநல்லுார் அக்ரஹாரம்.

சுகாதார சீர்கேடுசெல்வபுரம், எல்.ஐ.சி., காலனி, துர்கா நகரில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள, காலி இடத்தில், குவிக்கப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில், குப்பை தொட்டிகள் வைத்து முறையாக, குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.- ஜனார்த்தனன், செல்வபுரம்.

பாரி நகரில் கழிவும் குப்பையும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், பாரி நகருக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது. சாலையோரமும் குப்பை குவிந்துள்ளது.- தியாகராஜன், பாரி நகர்.

குழாய் உடைப்பால் வீணாகுது குடிநீர்போத்தனுார், மேட்டூர், குமரன் நகர் ரோட்டில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- விஜயகுமார், குமரன் நகர்.

சிதிலமடைந்த மின் கம்பம்கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, சாமிசெட்டிபாளையம், பெரிய கிணறு வீதியில் சிதிலமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்றி, புது கம்பம் அமைக்க வேண்டும்.- கார்திக், சாமிசெட்டிபாளையம்.

தெலுங்கு வீதியில் நாய் தொல்லைகாந்திபார்க், தெலுங்கு வீதியில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- ராஜா, காந்திபார்க்.

குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்வடவள்ளி, பொம்மண்ணம்பாளையம் பிரிவில் இருந்து, இத்தலாம்பாளையம் செல்லும் பிரதான சாலையில், போர்வெல் குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாகிறது.- சண்முகம், பொம்மண்ணம்பாளையம்.

சாலையில் சாக்கடை நீர்காளப்பட்டி, நேரு நகர், சேரன் மாநகர் ரோடு, நிலா கார்டன் அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- சண்முகசுந்தரம், நேரு நகர்.

சாலையை சீரமைக்கணும்பெரியநாயக்கன்பாளையம் அருகே, சாமிசெட்டிபாளையம், சவுடாம்பிகா நகரில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- குப்புலட்சுமி, சவுடாம்பிகா நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X