பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

அன்னூர்:சொட்டுநீர் பாசனம் அமைக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.அன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா கூறியுள்ளதாவது:தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, சொட்டு நீர் பாசனம் தீர்வாகும். குறைந்த நீரில், அதிக பரப்பில் பயிரிடலாம். உரங்களையும், சொட்டுநீர் கருவி வாயிலாக பயிர்களுக்கு அளிக்கலாம்.சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதமும், மானியம் தரப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு அதிக பட்சம், 10 ஏக்கருக்கும், பெரிய விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கருக்கும், மானியம் கிடைக்கும். விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார், சிறு குறு விவசாயி சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், அன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விவரங்களுக்கு, 97919 98833, 95784 52676, 99433 66422 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X