பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் சிறுதானியம்; பல்கலை பயிற்சி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சூலூர்:தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், சிறுதானிய உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி, கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் இருந்து, காணொளி வாயிலாக நடந்தது.சூலூர் வேளாண் விரிவாக்க மையத்தில், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளை, வட்டார உதவி இயக்குனர் சுந்தர வடிவேல் வரவேற்றார்.கோவை வேளாண் பல்கலை சிறுதானிய உற்பத்தித் துறை தலைவர் ரவிகேசவன் பேசுகையில், "நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட உடலுக்கு தேவையான, பல சத்துக்கள் சிறுதானியங்களில் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறந்த உணவாக இருப்பது சிறுதானியங்கள்தான். சாமை, திணை, வரகு, குதிரைவாலி ஆகிய குறுந்தானியங்களை உற்பத்தி செய்தால், வருமானம் இரட்டிப்பாகும்," என்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி, சிறுதானிய உற்பத்திதுறை உதவி பேராசிரியர் செந்தில்வேல், பூச்சியியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X