மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை வனச்சரகம் பில்லூர் அணைப் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் அன்சூர், குண்டூர், அத்திக்கடவு, சுரண்டி, குறவன் கண்டி, கூடப்பட்டி, சுண்டபட்டி, சிறு கிணறு, தொண்டை, பூச்சிமரத்தூர், நெல்லி மரத்தூர், கெத்தைக்காடு, பரளிக்காடு, மானார், முள்ளி, வீரக்கல், நீராடி, பில்லூர் அணை என, 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 1500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளியங்காடு பகுதியில், விவசாய கூலி வேலைக்கும், காரமடை பகுதியில் கட்டட வேலைக்கும், பஸ்களில் வந்து சென்றனர்.தற்போது ஊரடங்கால், பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மலைவாழ் மக்கள் போதிய வருவாய் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X