பொது செய்தி

தமிழ்நாடு

உஷாரா இருங்க... விலகியே இருங்க: ஊராட்சிகளில் பரவுகிறது வைரஸ்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சூலூர்:ஊரகப்பகுதிகளில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தற்காப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.சூலூர் வட்டாரத்தில், கடந்த, 16 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நெருக்கம் உள்ள ஊரக பகுதிகளில், நோய் தொற்று அதிகரித்து வருகிறது.இப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சூலூர், கண்ணம்பாளையம், கலங்கல், கணியூர் ஊராட்சி பகுதியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், காங்கயம்பாளையத்துக்கு வந்த வடமாநில தொழிலாளிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தங்கியிருந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் வசிப்போரின் சளி மாதிரி, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அருகில் உள்ளவர்களின் சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் கூறுகையில், "ஊரக பகுதிகளில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் தான் பரவல் அதிகம் உள்ளது. மேலும் பரவாமல் இருக்க கடைகள் அடைக்கப்படுகின்றன. ஆனாலும், முக கவசங்கள் அணியாமலும், தனி நபர் இடைவெளியில்லாமலும் பலர் நடமாடுகின்றனர். தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும், வெளியில் நடமாடக்கூடாது. சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X