பொது செய்தி

தமிழ்நாடு

அன்புள்ள தபால் துறை அறிவது...

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 அன்புள்ள தபால் துறை அறிவது...

கோவை:ஊரடங்கு உத்தரவை அலட்சியம் செய்யும் விதமாக, மேற்கு மண்டல தபால் துறை சார்பில், கோவை நட்சத்திர ஓட்டலில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற, விருது வழங்கும் விழா நடந்துள்ள சம்பவம், அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேற்கு மண்டலத்தின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட, 11 தபால் கோட்டங்கள் உள்ளன. இதில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு, விருது வழங்கும் விழா, அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில், ஆடம்பரமாக நடந்தது.இந்த விழாவில் தமிழக தபால் துறைத்தலைவர் செல்வகுமார், மேற்கு மண்டல தபால் துறைத்தலைவர் செய்லிபர்மன், கோவை கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் சுதிர்கோபால் ஜாக்ரே உட்பட, 80க்கும் மேற்பட்ட தபால் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கூட்டம் கூடவோ, விழாக்கள் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கியமான அரசு விழாக்கள் கூட நடத்தப்படுவதில்லை.இந்நிலையில், தபால் துறை சார்பில், நட்சத்திர ஓட்டலில் இப்படி ஒரு ஆடம்பர விழா, விருந்து உபசரிப்புகளுடன் நடந்து இருப்பது, ஊரடங்கு உத்தரவு விதிகளை, அலட்சியம் செய்வதாக உள்ளது. பங்கேற்றவர்கள் மாஸ்க் அணியாமலே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், காண்பவர்களை அதிர வைக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 80க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் முன்பாகவே வந்து, அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கு எதன் அடிப்படையில், அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல், உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், சட்டத்தை மீறி இப்படி ஒரு விழா கோவையில் நடந்து இருப்பது, கொரோனா நோய் தொற்றும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் பங்கேற்றவர்களை, கொரோனா பரிசோதனை செய்தால்தான், நோய் தொற்று விபரம் தெரியவரும்.மேற்கு மண்டல தபால்துறை உதவி கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு கூறுகையில், ''இந்த ஊரடங்கு காலத்தில், தபால் துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த, 'ரிவ்யூ மீட்டிங்' தான் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர். விதிகள் மீறப்படவில்லை,'' என்றார்.அதிகாரி கூறுவது போல், இந்நிகழ்ச்சி ஒரு 'ரிவ்யூ மீட்டிங்' அல்ல; விருது வழங்குவதற்கென நடத்தப்பட்டது என்பதை, புகைப்படம் நிரூபிக்கிறது.இந்நிலையில், அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில், மாஸ்க் அணியாமல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இப்போது, தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற, 'திக் திக்' மனதுடன் இருக்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல், உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், சட்டத்தை மீறி இப்படி ஒரு விழா கோவையில் நடந்து இருப்பது, கொரோனா நோய் தொற்றும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் பங்கேற்றவர்களை, கொரோனா பரிசோதனை செய்தால்தான், நோய் தொற்று விபரம் தெரியவரும்.'அனுமதி பெறவில்லை'கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், '' இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்களுக்கு தெரியாது. அனுமதி பெறவில்லை. திருமண நிகழ்ச்சியில், 50 பேர், துக்க நிகழ்ச்சியில், 20 பேர் பங்கேற்க மட்டும் அனுமதி உண்டு. மற்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என, கலெக்டர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடந்தது உண்மை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X