பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை பார்த்து பயப்படாதீங்க...

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

''கொரோனா நோயால் மாண்டவர்களை விட, மீண்டவர்களே அதிகம். ஆகவே, மக்கள் பயப்பட வேண்டாம்,'' என்று தைரியமூட்டுகிறார் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் அரவிந்தன்.சாதாரணமாக இருமல், தும்மல், சளி இருந்தால் கூட மக்களிடம் கொரோனா பயம் வந்து விடுகிறது. இந்த பயத்தை போக்குவது எப்படி?காய்ச்சல், உடல்வலி இல்லாமல் இருமல், தும்மல் மட்டும் வந்தால், அது சாதாரண ஜலதோஷமாக இருக்கும். காய்ச்சலுடன் இருமல், சளி இருந்தால் வைரஸ் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல், காய்ச்சலும், உடல் வலியும் அதிகமாக இருந்தால் டாக்டரை பார்த்து, டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும். மக்கள் பயப்பட தேவையில்லை. இந்த நோயை பொறுத்தவரை, 98 சதவீதம் பேர் குணமாகி விடுகின்றனர்.நோய் அறிகுறி இருப்பவர்கள் கூட, டெஸ்ட் எடுக்க முன் வருவதில்லையே ஏன்?வெளிநாடுகளில் மக்கள் இந்த நோயை, மற்ற நோய்களை போல் இதுவும் ஒரு நோய் என, நினைத்து வைத்தியம் பார்க்கின்றனர். டாக்டர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றுகின்றனர். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கூட, தைரியமாக இருக்கின்றனர். இங்கு இதை மோசமான நோயாகவும், வரக்கூடாத நோய் வந்து விட்டதாகவும் நினைக்கின்றனர்.இதற்காக சிலர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவுக்கு செல்கின்றனர். இது தவறு. நோயை போக்க வைத்தியம் பார்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டுமே தவிர, கோழைகள் போல் முடிவு எடுக்க கூடாது. இந்த நோயில் இருந்து மாண்டவர்களை விட, மீண்டவர்கள்தான் அதிகம். சைனஸ் உள்ளவர்களை இந்நோய் எவ்வாறு பாதிக்கிறது?ஒருவர் தும்மும் போது வெளிப்படும் நீர் துளிகள் காற்றில் பரவி, சுவாசம் வழியாக உள்ளே சென்று, தொற்று ஏற்படுத்துகிறது. அதனால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டுமல்ல, நுரையீரல், சர்க்கரை மற்றும் சிறுநீரக பிரச்னை இருப்பவர்களும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம். மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.மாஸ்க் அணிய ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?பொதுவாக, ஒரு மணி நேரத்தில், சராசரியாக 20 முறை நம் முகத்தை தொடுகிறோம். கைகளில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியாக உள்ளே செல்கிறது. மாஸ்க் அணிவதால் தொற்று தவிர்க்கப்படுகிறது. முகத்தையே தொடக்கூடாது.சிலர் சளி, காய்ச்சலுக்கு கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனரே...?அப்படி யாரும் வாங்கி சாப்பிடக்கூடாது. கொரோனாவை கண்டுபிடிப்பதில் சிரமமாகி விடும். நோய் வீரியமடைய வாய்ப்புள்ளது. தெரிந்த டாக்டர்கள் இருந்தால், போனில் கூட கேட்டு மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடலாம்.கொரோனா காது வழியாக பரவாதா?பரவாது. குறித்த நேரத்தில் வைத்தியம் பார்க்க தவறியதால், காது கேட்கும் தன்மையை பலர் இழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X