பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாடு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கோவை, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு, சில நாட்களுக்கு முன், கமிஷனர் ஷ்ரவன்குமாரிடம் மனு கொடுக்க, இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் வந்திருந்தனர். அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, கமிஷனர் அலுவலகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நோய் தொற்று பரவலை தடுக்க, வெளிநபர்களின் வருகையை கட்டுப்படுத்த முதலாவது கேட் மூடப்பட்டு, அதிகாரிகள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.இரண்டாவது கேட் எப்போதுமே மூடப்பட்டு இருக்கும். மூன்றாவது கேட் வழியாக, மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் வர வேண்டும்.வருகை பதிவேட்டில், பெயர், மொபைல் போன் எண், யாரை சந்திக்க செல்கிறார்கள் என்கிற விபரத்தை எழுதி, கையெழுத்திட வேண்டும். பின், உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது; 100 டிகிரிக்கு கீழிருந்தால், அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.அதிகமாக இருந்தால், மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். ஊழியர்கள், ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மேல், வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X