பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் :மத்திய செயலர் பாராட்டு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் :மத்திய செயலர் பாராட்டு

கோவை:'ஸ்மார்ட் சிட்டி'யில், பொலிவூட்டப்பட்ட, கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தின் அழகை, படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து ரசித்த, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா, தனது, 'டிவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை உக்கடம் பெரிய குளத்தின் வடக்கு கரையில், ரூ.39.74 கோடியில், 1.3 கி.மீ., துாரம் பொலிவூட்டப்படுகிறது. இதில், 600 மீட்டர் துாரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள பகுதியில் வேலை நடந்து வருகிறது.வாலாங்குளத்தில், மேம்பாலத்தின் கீழ், ரூ.23.83 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விரு குளங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் திறந்து வைத்தார்.அன்றைய தினம் இரவில், வண்ண விளக்குகளால் குளங்கள் ஜொலித்தன. இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், 'வாட்ஸ்அப்' குழுக்களில் வைரலாகின.இவற்றை, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பினர்.அவற்றை பார்த்து மகிழ்ச்சியடைந்த, அத்துறை செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா, தனது 'டிவிட்டர்' பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X