மின் ஊழியர் இல்லாமல் மூன்று ஊராட்சிகள் தவிப்பு| Dinamalar

மின் ஊழியர் இல்லாமல் மூன்று ஊராட்சிகள் தவிப்பு

Added : ஜூலை 01, 2020
Share

அன்னூர்:மின்வாரிய ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டதால், மூன்று ஊராட்சி மக்கள் தவிக்கின்றனர்.பொன்னே கவுண்டன்புதூர், உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த லைன் மேனுக்கு, 10 நாட்களுக்கு முன் பதவி உயர்வு கிடைத்து, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், பதுவம்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில், 25 கிராமங்களுக்கு, பியூஸ் போடுதல், புதிய மின் இணைப்பு, டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர் ஒருவரை வைத்து பணிகளை செய்கின்றனர். இதனால் மின்தடை புகார்கள், உடனுக்குடன் கவனிக்கப்படுவதில்லை.'மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைவில் புதிய லைன் மேன் நியமிக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X