கோவில் உண்டியல்களில் ரூ 1.60 லட்சம் காணிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் உண்டியல்களில் ரூ 1.60 லட்சம் காணிக்கை

Added : ஜூலை 01, 2020
Share

மேட்டுப்பாளையம்:காரமடை நஞ்சுண்டேஸ்வரர், சந்தான வேணுகோபால் ஆகிய இரு கோவில்களும், அரங்கநாதர் கோவிலின் உப கோவில்களாகும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இரு கோவில்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு பிரச்னையால், கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தடைபட்டது.நேற்று இரு கோவில்களிலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் தலைமையில், கோவில் இன்ஸ்பெக்டர் சரண்யா, கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 117 ரூபாயும், சந்தான வேணுகோபால் கோவிலில், 20 ஆயிரத்து, 097 ரூபாயும் இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X