பொது செய்தி

தமிழ்நாடு

136 கடைகள் அதிரடியாக மூடல்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணமாக, 136 வணிக கடைகள் மூடப்பட்டுள்ளதாக, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற நிலையில், ஒரு சிலரின் அலட்சியம் காரணமாக, கொரோனா தடுப்பு பணி, அதிகாரிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் ராஜாமணி கூறுகையில், '' மாவட்டத்தில் இதுவரை விதிமுறை மீறி செயல்பட்ட, 136 வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன; இதில், மாநகராட்சி பகுதியில், 79 கடைகள் மூடப்பட்டுள்ளன. 9 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் விதிமுறை மீறிய, 19 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. தவிர, குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி பயணிகளை ஏற்றி வந்த, 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X